இந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2 அல்லது 3 சீசன்களையே கடந்துள்ளது.  தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.

 

 

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பித்திருக்க வேண்டியது ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழல்நிலை ஏற்பட்டது. இதனால் பிக்பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனுக்கான புரோமோஷன் சமீபத்தில் வெளியிடப்பட்டு, அது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

 

 

இதையும் படிங்க: சிம்பிள் புடவை... தலை நிறைய மல்லிகைப்பூ... வைரலாகும் நயன்தாராவின் அடக்க ஒடுக்கமான போட்டோ...!


தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனையும் நாகார்ஜுனா  தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-யை நாகார்ஜுனா தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

 

இதையும் படிங்க: இரண்டாவது கணவருக்கு அவசர திருமணம்... சீரியல் நடிகை போலீசில் பரபரப்பு புகார்...!

இதுதொடர்பான அவரது ட்விட்டில், மீண்டும் லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் ஃபுளோரில்.. வாட் எ வாவ்.. வாவ் என பதிவிட்டுள்ளார். நாகர்ஜூனாவின் இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்த பலரும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரமோ ஷூட்டிங் தொடங்கியிருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இந்த முறை தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு முன்னதாகவே தனிமைப்படுத்தப்பட்டு பின்னரே நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.