பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது தமிழில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழில் பிக்பாஸ் தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின், தெலுங்கிலும் பிக்பாஸ் 3 வது சீசன் துவங்கப்பட்டது.  தமிழில் கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் இந்த முறை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன் ஜூனியர் என்.டி.ஆர், மற்றும் நானி ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர்.

ரசிகர்கள் அனைவராலும் ரசித்து பார்க்கப்படும், இந்த நிகழ்ச்சி தற்போது தெலுங்கில் மிகவும் போராக போய் கொண்டிருக்கிறதாம். இதனால் இதன் டி.ஆர்.பி தற்போது அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் தொகுப்பர் நாகர்ஜுனா என்றே கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை அனல் பறக்க தொகுத்து வழங்கி வந்த இவர், தற்போது தொகுத்து வழங்கி வரும் விதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாம். ஏதேனும் ஒரு கருத்தை ஆழமாக சொல்ல அவர், தயங்குவதாக கூறப்படுகிறது.

அதே போல் போட்டியாளர்களும் இந்த சீசனில் உறுதியாக இல்லையாம்.  தற்போது விளையாடி வரும் போட்டியாளர்கள், திடமான மனநிலை இல்லாமல் விளையாடி வருவதாக மக்கள் கருதுகிறார்கள். மேலும் மக்கள் ரசிக்கும் விதத்தில் அவர்களால் கன்டென்ட் கொடுக்க முடியவில்லை.  

இதனால், நாளுக்கு நாள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களில் எண்ணிக்கை வெகுவாக குறைத்து வருகிறது. அதே போல் இதன் டி.ஆர்.பி ரேட்டிங், அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.