Telugu actress sexual harresment
தெலுங்கு சினிமாவில் தனித்துவமான பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காஞ்சனா மொய்த்ரா. இவர் கடந்த செவ்வாய்க் கிழமையன்று படப்பிடிப்பை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது கார் ஓட்டுநர் ஓர் இடத்தில் காரை நிறுத்தி விட்டு, கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. திடீர் என நடிகையின் கார் அருகே வந்த இளைஞர்கள் சிலர், காஞ்சனா மொய்த்ராவை பாலியல் துன்புறுத்தல் செய்து அவரை தகாத வார்த்தைகளால் கேலி செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அருகே இருந்த காவல் நிலையத்திற்கு தன்னுடைய கார் ஓட்டுனருடன் சென்று நடந்தவற்றைக் கூறி போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
