படங்களில் வாய்ப்பு கொடுக்க முன்வந்த இயக்குனர்கள்  தன்னை  படுக்கையறைக்கு  அழைத்ததால் தெலுங்கு திரையுலகில் இருந்து தான் விலகிவிட்டதாக நடிகை மஞ்சரி கருத்து தெரிவித்துள்ளார் . சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் ஒன்று  சூப்பர் ஹிட்டானது ,  ஆனால் அப்படத்துடன் தெலுங்கு படங்களுக்கும்  பைபை சொல்லி விட்டார்  மஞ்சரி .  பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வந்த  நிலையில் இவர் ஒரேயடியாக தெலுங்கு படத்துக்கு முழுக்கு போட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. 

ஏன் தெலுங்கு சினிமாவில் இருந்து விலகினார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்துவந்தனர்.  ஆனால் எதற்குமே மஞ்சரி சரியான காரணம் சொல்லாமல் மௌனம் காத்து வந்தார் .  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்த அவர்.  தெலுங்கில் நடிப்பதை நிறுத்தியதற்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்  மஞ்சரி,  அதில் தான் நடித்த சக்தி திரைப்படம் பெரிய ஹிட்டானது .  அதன்பிறகு எனக்கு அதிக பட வாய்ப்புகள் வந்தன .  ஆனால் அப்படத்தின் இயக்குனர்கள் அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என படுக்கை அறைக்கு  அழைத்து  வற்புறுத்தினார் . அப்படி படுக்கை அறையை பகிர்ந்து கொண்டுதான் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு  இல்லை . 

என் திறமையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது . எனவே அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக வேண்டிய அவசியம்  எனக்கு இல்லை ,  அதனால் தெலுங்கு சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிவிட்டேன்  என அவர் தெரிவித்துள்ளார் . தனக்கு நேர்ந்த  சம்பவங்களுக்கு பின்னர் நான்  மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன்.   கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன்,  என நடிகை  மஞ்சளில் அதிரடியாக தெரிவித்துள்ளார் .  இது தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .