தமிழில் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித் படம் குறித்த அறிவிப்பு வந்ததும் அதை டுவிட்டரில் ட்ரெண்டாக்குவதில் தல, தளபதி ரசிகர்களை மிஞ்ச ஆளில்லை. அதேபோல சோசியல் மீடியாவில் விஜய், அஜித் பெயரை நாறடிக்கவும் இவர்களை விட்டால் வேற ஆளில்லை. அந்த அளவிற்கு புதுசு, புதுசா கேவலமான ஹேஷ்டேக்குகளை உருவாக்கி மாற்றி, மாற்றி நாறடித்துக் கொள்கின்றனர். இப்போது அந்த பழக்கம் முதன் முறையாக டோலிவுட்டில் தொற்றிக்கொண்டுள்ளது. தல, தளபதி ஃபேன்ஸே தேவலாம்பா என சொல்லும் அளவிற்கு மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அளப்பறை செய்து வருகின்றனர். 

த்ரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, தபு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த அலா வைகுந்தபுரம்லோ படம் பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆனது. அல்லு அர்ஜுனின் வழக்கமான அத்தனை மசாலாக்களையும் உள்ளடக்கிய இந்த படம் உலக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளது. ஆந்திராவிலும் திரையிட்ட தியேட்டர்கள் அனைத்திலும் வசூல் களைகட்டி வருகிறது.  குறிப்பாக த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 

அதேபோல பொங்கல் விருந்தாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சரிலேரு நீகேவரு படமும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியுள்ள இந்த படத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் விஜய சாந்தி நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது. ராணுவ மேஜராக நடித்துள்ள மகேஷ் பாபு அதிரடி சண்டை மற்றும் நகைச்சுவை காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார். 

இதையும் படிங்க: குளியல் அறை வீடியோவில் பிரபல மாடல் பெயர்... முன்னாள் மிஸ் இந்தியா பெயரை மிஸ் யூஸ் செய்த நபர் மீது புகார்...!

இந்த இரண்டு படங்களிலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் டோலிவுட்டை அதிரவைத்துள்ளது. இந்நிலையில் நடிகர்கள் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை கலாய்க்கும் விதமாக ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ஒருவரை, ஒருவர் வம்பிழுத்து வருகின்றனர். 

அல்லு அர்ஜுனை கலாய்க்கும் விதமாக #FakeKaBaapAlluArjun என்ற ஹேஷ்டேக்கை மகேஷ் பாபு ரசிகர்களும், #FakeQweenMaheshbabu என்ற ஹேஷ்டேக்கை அல்லு அர்ஜுன் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனையும் மரணமாக கலாய்ந்து இந்த ஹேஷ்டேக்குகளில் தெலுங்கு வாலாக்கள் போடும் கமெண்ட்களும், மீம்ஸ்களும் வைரலாகி வருகிறது.