குளியல் அறை வீடியோவில் பிரபல மாடல் பெயர்... முன்னாள் மிஸ் இந்தியா பெயரை மிஸ் யூஸ் செய்த நபர் மீது புகார்...!

சமீபகாலமாக இவரது பெயரில் சோசியல் மீடியாவில் ஆபாச கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் பரப்பப்பட்டு வந்துள்ளன. 

Super Model Natasha Suri Files Complaint Against Man For Tagging Obscene Pictures

முன்னாள் மிஸ் இந்தியா நட்டாஷா சூரி, பிரபல மாடலாக விளம்பர துறையில் கலக்கி வருகிறார். சமீபகாலமாக இவரது பெயரில் சோசியல் மீடியாவில் ஆபாச கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் பரப்பப்பட்டு வந்துள்ளன. இதுகுறித்து மும்பை போலீசாரிடம் நட்டாஷா கொடுத்துள்ள புகார், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Super Model Natasha Suri Files Complaint Against Man For Tagging Obscene Pictures

நவம்பர் 2019ம் ஆண்டு முதல் பிளின் ரெமிடியோஸ் என்ற நபர் அவரது Indiascoops.com மற்றும் Indiaspeaks.live ஆகிய இணையதளங்களில் ஆபாசமான கட்டுரைகளை எழுதி, அதை தனது பெயரில் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

Super Model Natasha Suri Files Complaint Against Man For Tagging Obscene Pictures

மேலும் வேறு யாரோ ஒரு பெண்ணை வைத்து குளியல் அறையில் குளிப்பது போன்ற வீடியோக்களை எடுத்து, அதில் நட்டாஷா சூரி சிங் என்ற பெயரை பயன்படுத்துவதாகவும் புகார் கூறியுள்ளார். மாடலிங் துறையில்  நட்டாஷா சூரி என்ற பெயரில் தான் மட்டுமே மாடலாக இருப்பதாகவும், குறிப்பிட்ட காரணத்திற்காக தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். 

Super Model Natasha Suri Files Complaint Against Man For Tagging Obscene Pictures

சில போலி டுவிட்டர் கணக்குகளின் மூலம் தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகளை தனக்கு அனுப்பியதாகவும் புகார் அளித்துள்ளார். நட்டாஷாவின் புகாரை பதிவு செய்த போலீசார் பிளின் ரெமிடியோஸ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios