Asianet News TamilAsianet News Tamil

பிரபல நடிகருக்கு படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

தமிழில் 'ஜெயம்' படத்தில் வில்லனாக நடித்தவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கோபிசந்த். இவர் தற்போது பெயரிடாத படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 

telugu actor gopichand met in accident for shooting spot
Author
Chennai, First Published Feb 20, 2019, 6:12 PM IST

தமிழில் 'ஜெயம்' படத்தில் வில்லனாக நடித்தவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கோபிசந்த். இவர் தற்போது பெயரிடாத படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் ஜெய்ப்பூர், அருகே உள்ள மண்ட்வாவில் படமாக்கி வந்தனர் படக்குழுவினர். அப்போது கோபிசந்த் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வில்லன்களுடன் மோதுவது போல் காட்சி  எடுத்தனர். 

telugu actor gopichand met in accident for shooting spot

இதை 3 கேமிராக்கள் வைத்து படமாக்கி கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை, வேகமாக ஓட்டி சென்ற கோபிசந்த் திடீர் என பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்தார். 

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கோபிசந்தை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் படக்குழுவினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

telugu actor gopichand met in accident for shooting spot

இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் கோபிசந்த் முழுமையாக குணமடைந்த பிறகு தான் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர் படப்பிடிப்பில் படுகாயம் அடைந்துள்ளது இவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios