நடிகை ஒருவர், இயக்குனர் தன்னை காதலிப்பது போல் நடித்து பல முறை பாலியல் உறவு வைத்து கொண்டு, கர்ப்பமான பின் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

நடிகை ஒருவர், இயக்குனர் தன்னை காதலிப்பது போல் நடித்து பல முறை பாலியல் உறவு வைத்து கொண்டு, கர்ப்பமான பின் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் பழகி வந்துள்ளார். அவரை பல படங்களில் நடிக்க வைப்பதாகவும், சீரியல் வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறியதோடு... காதல் வலையில் வீழ்த்தி இரண்டு வருடங்கள் பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதன் காரணமாக அந்த நடிகை கர்ப்பமாகி உள்ளார். எனவே ஆயுஷ் திவாரியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூற, அவர் நடிகையை தகாத வார்த்தைகள் கூறி திட்டியதோடு, நண்பர்கள் முன்னிலையில் நடிகையின் நடத்தை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், நடிகை காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்தார். தற்போது இவர் அளித்த புகாரின் அடிப்படையில்... போலீசார் வழக்கு பதிவு செய்து ஆயுஷ் திவாரியை விசாரணை செய்து வருகிறார்கள்.