தென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபிசில் பெரும் ஓபனிங் உள்ள இரண்டு ஹீரோக்கள் அன்று நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளார்கள். தமிழகத்தில் பேட்டக்கு வில்லனாக அஜித்தின் விஸ்வாசம் உள்ளதைப்போல தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும் பேட்டைக்கு பாலகிருஷ்ணா நடித்துள்ள என்டிஆர் படம், ராம்சரண் நடித்துள்ள 'வினய விதேய ராமா’, வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்துள்ள 'எப் 2' படங்கள் இன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் திருட்டுத்தனமாக தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகாமல் இருக்க நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே வேற லெவலில் இருந்த நிலையில் அவை அனைத்தையும் படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். பல்வேறு நாடுகளில் இந்த படம் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய திரையுலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் இருந்து வரும் தமிழ்ராக்கர்ஸ் அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் கடுமையாக எச்சரித்த போதிலும் தமிழ்ராக்கர்ஸ் இப்படி செய்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுவும், கூடவே வந்த விஸ்வாசம் என்டிஆர் படம், 'வினய விதேய ராமா’, 'எப் 2'   படங்களைக் காட்டிலும்,"பேட்ட" படம் மட்டும் இணையதளத்தில் ஹெச்டி தரத்தில் மிக பிரமாண்டமாக வெளியானது தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.