கமலை பிரிந்து சில நாட்கள் வருத்தத்துடன் காண பட்ட நடிகை கௌதமி, சமீப காலமாக சமூக சேவை மற்றும் அரசியல் சம்பந்தமான சில விஷயங்களில் தீவிர ஈடுபாடு காண்பித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதனால் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்தும் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்.

முதலமைச்சர் பன்னீர் செல்வம் மௌனம் கலைத்து, பல அதிர்ச்சி தகவலை வெளியிட்ட போது, இதற்கு தான் இப்படி பட்ட ஒரு மனிதரை அம்மா தேர்தெடுத்துள்ளார் என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்...

தற்போது மேலும் ஒரு ட்விட் செய்துள்ளார் அதில் 'அம்மாவை தேர்வு செய்த மக்களின் விருப்பத்தை, தமிழக ஆளுநர் காப்பர் என நம்புகிறேன். மேலும் ஓபிஎஸ் தான் முதல்வர், நீதிக்காவ தமிழ்நாடு தொடர்ந்து போராடும் என்பது போலவும், இது நமது போராட்டம் என்றும் பதிவிட்டுள்ளார்.