கடந்த 7 மாதங்களுக்கு மேலாக, திறக்கப்படாத திரையரங்குகள், 10 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கூறிய நெறிமுறைகளை தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

"ஒன்றுக்கும் மேற்பட்ட திரையங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்களில் உள்ள திரையரங்குகள் (multiplex), வணிக வளாகங்களில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (SOP)

பின்னணி

இந்தியாவில் தற்போதுள்ள கொரோனா நோய்த் தொற்றினைக் கருத்தில் கொண்டு, திரையரங்குகளில், திரைப்படங்கள் திரையிடும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு பங்குதாரர்கள், திரைப்படங்கள் திரையிடும்போது கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நோக்கம் 

இந்த நிலையான வழிகாட்டு நடைமுறைகளில், பொதுவான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளதோடு, திரைப்படங்கள் திரையிடும் போது கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய குறிப்பான தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், உள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகங்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்களில் உள்ள திரையரங்குகள் (multiplex), வணிக வளாகங்களில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும், திரைப்படங்கள் திரையிட அனுமதிக்கப்படும்

3. திரையரங்குகள் செயல்பட தடை செய்யப்பட்ட பகுதிகள்

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை. திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடுவதற்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள்

பொதுவான நோய்த் தடுப்பு வழிமுறைகள்

கொரோனா நோய்த் தொற்றின் ஆபத்தை குறைக்க, எளிய பொது சுகாதார நடவடிக்கைகளை உள்ளடக்கிய கீழ்க்கண்ட பொதுவான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை திரையரங்குகளுக்கு வருகை புரியும் பொதுமக்கள், திரையரங்கின் பணியாளர்கள் உட்பட அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும்

திரையரங்கத்திற்கு வெளியேயும், பொது இடங்களிலும், காத்திருப்பு அறைகளிலும் எப்பொழுதும் ஒருவொருக்கும் மற்றவருக்கும் இடையே குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்

திரையரங்கு வளாகத்திற்குள் எப்பொழுதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் திரையரங்கு வளாகத்தின் பொது இடங்கள், திரையரங்கின் நுழைவாயில் மற்றும்

வெளியேறும் வழி ஆகிய இடங்களில், கைகளால் தொடாமல் பயன்படுத்தக் (touch free) கூடிய கை சுத்திகரிப்பான் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும்

பொது மக்கள் சுவாசம் சார்ந்த நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இருமல் மற்றும் தும்மலின் போது, வாய் மற்றும் மூக்கை, திசு பேப்பர் (Tissue Paper) / கைக்குட்டை/ முழங்கை கொண்டு கட்டாயம் மூடுவதோடு, அச்சமயங்களில் உபயோகப் படுத்தப்பட்ட திசு பேப்பர்களை (Tissue Paper) முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

அனைவரும் தங்களது உடல்நலத்தை சுயமாக கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் தங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு ஏற்படின் அது தொடர்பாக உடனடியாக மாநில மற்றும் மாவட்ட உதவி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். vi. பொது இடங்களில் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.

அனைவரும் ஆரோக்கிய சேது செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது viii. திரையரங்கு வளாகத்தில், ஒரு நபருக்கு காய்ச்சல் / இருமல் / தொண்டை புண் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், தொடர்புடைய திரையரங்கு நிருவாகம், கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: -

அ) நோயுற்ற நபரை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் வண்ணம் ஒரு தனி அறை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்க வைக்க வேண்டும்.

ஆ) தனிமைப்படுத்தப்பட்ட நபரை மருத்துவர் பரிசோதிக்கும் வரை அவருக்கு முகக்கவசம் வழங்க வேண்டும்

இ) உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை அல்லது மாநில / மாவட்ட உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஈ) பின்னர் சுகாதாரத் துறையால் நியமிக்கப்பட்ட மருத்துவர் (மாவட்ட விரைவு ஆயத்த குழுக்கள் (RRT) / சிகிச்சையளிக்கும் மருத்துவர்) அந்த நபருக்குள்ள நோய்த் தொற்றின் அபாயம் குறித்து மதிப்பீடு செய்ததன் அடிப்படையில், அவருக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை, அவர் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிவது கிருமிநாசினி தெளிப்பதற்கான தேவை ஆகியவை குறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்

உ) அந்த நபருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் வளாகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட வேண்டும். திரையரங்கின் நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழியில் பின்பற்ற வேண்டிய

வழிமுறைகள்

1. திரையரங்கின் நுழைவாயிலில், பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா நோய் அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் அணியாதவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படக் கூடாது,

iii. திரையரங்கின் நுழைவாயில் மற்றும் பணி செய்யும் இடங்களில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்பட வேண்டும். iv. திரையரங்கு வளாகம் மற்றும் திரையரங்கிற்குள், பொது மக்கள் நுழையும் போதும் வெளியே வரும் போதும், சமூக இடடைவெளியினை கடைப்பிடித்து வரிசையில் நிற்கும்

வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்

V. திரையரங்கிலிருந்து பொது மக்கள் வெளியேறும் போது, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வண்ணம், வரிசை வரிசையாக பொது மக்கள் வெளியேறுவதை முறைப்படுத்த வேண்டும்

vi. ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்களில் உள்ள திரையரங்குகள் (multiplex), வணிக வளாகங்களில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும், பொது மக்கள், வரிசை வரிசையாக உள்ளே செல்வதையும், வெளியேறுவதையும் உறுதி செய்யும் பொருட்டு ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும்

இருக்கை அமைப்பு தொடர்பான வழிமுறைகள்

1. ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்களில் (multiplex), வணிக வளாகங்களில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் உள்ள மொத்த இருக்கைகளுள், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பொது மக்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க அனுமதிக்கப்படும். மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வண்ணம் இருக்கை அமைப்பு இருக்க வேண்டும். திரையரங்குகளின் மாதிரி இருக்கை அமைப்பு இணைப்பு 1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

ii. எப்பொழுதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வண்ணம் பயன்படுத்தப்படக்கூடாத / அமரக்கூடாத இருக்கைகளில்” பொது மக்கள் அமர்வதை தடுக்கும் பொருட்டு டேப் (tape) அல்லது புளுரசன்ட் மார்க்கர் (fluorescent marker) கொண்டு பயன்படுத்தப்படக்கூடாத / அமரக்கூடாத இருக்கைகளில்" குறியீடுகள் போடப்பட வேண்டும்

ii. இணைய வழியாக அனுமதி சீட்டு முன் பதிவு மேற்கொள்ளும் போதும், திரையரங்கிற்குள் உள்ள கவுன்ட்டர்களில் திரைப்படத்திற்கான அனுமதி சீட்டு வழங்கும் போதும், “பயன்படுத்தப்படக்கூடாத | அமரக்கூடாத இருக்கைகளின்” விபரம் குறியிட்டு காட்டப்பட வேண்டும்

சமூக இடைவெளி தொடர்பான விழிமுறைகள்

1. திரையரங்கு வளாகத்தில் வாகன நிறுத்துமிடங்களிலும், திரையரங்கு வளாகத்திற்கு வெளியேயும், கூட்ட நெரிசலை தடுக்கும் பொருட்டு, சமூக பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் இடைவெளி

ii. வேலட் பார்க்கிங் (Valet Parking) வசதி இருக்கும் இடங்களில், வேலட் பார்க்கிங் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கட்டாயமாக முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும்

lil. ஒன்றுக்கும் மேற்பட்ட திரையங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்களில் (multiplex), வணிக வளாகங்களில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்குடன் வளாகங்களில் உள்ள எஸ்கலேட்டர் /மின்னுயர்த்தி (lift) ஆகியவற்றில் குறைந்த அளவிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

iv. திரையரங்குகளில் இடைவேளையின் (intermission) போது, பொதுவான இடங்களிலும், கூடங்களிலும், கழிவறைகளிலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கு


நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடைவேளையின் போது, (intermission) பொது மக்கள் திரையரங்கிலிருந்து வெளியில் வருவதை தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும். திரையரங்குகளின் பல்வேறு வரிசைகளில் அமர்ந்திருக்கும் பொது மக்கள், இடைவேளையின் போது (intermission) சமூக இடைவெளியினை கடைப்பிடித்து வெளியில் சென்று வரும் வகையில், இடைவேளைக்கான கால அளவை அதிகரிக்க வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகத்தில் (multiplex) ஒவ்வொரு திரையரங்கிற்கான காட்சி நேரத்தை மாற்றி அமைத்தல்

ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகத்தில் உள்ள திரையரங்குகளில் (multiplex), கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு திரையரங்கிற்கான காட்சி நேரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்

ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகத்தில் உள்ள திரையரங்குகளில் (multiplex), ஒரு திரையரங்கின் காட்சி தொடங்கும் நேரம் இடைவேளை மற்றும் காட்சி முடியும் நேரமும், அதே திரையரங்கு வளாகத்தில் உள்ள மற்றொரு திரையரங்கின் காட்சி தொடங்கும் நேரம், இடைவேளை மற்றும் காட்சி முடியும் நேரமும் ஒன்றாக இருக்கக்கூடாது.

முன்பதிவு மற்றும் பணப் பரிமாற்றம் தொடர்பான வழிமுறைகள்

i. ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாத டிஜிட்டல் முறையில் அனுமதி சீட்டுகள் வழங்குவது சரியார்ப்பது மற்றும் உணவு, குளிர்பானம் விற்பனை ஆகியவற்றிற்கு இணைய வழி, (online) இ-வாலட் (e-wallet) மற்றும் க்யூ.ஆர். குறியீடு (QR code) மூலம் கட்டணம் செலுத்தும் முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும். ii. கொரோனா நோய்த் தொற்று உள்ளவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறியும் பொருட்டு, திரைப்படக் காட்சிகளுக்கான அனுமதி சீட்டுக்கான முன் பதிவுகளின் போதும்

திரையரங்குகளில் அனுமதி சிட்டு கவுன்ட்ட ரில் (ticket counter) அனுமதிச் சீட்டு

வழங்கும் போதும், அனுமதி சீட்டு வாங்குபவரது தொலைபேசி எண்ணைப் பெற

வேண்டும் iii. திரையரங்குகளில், அனுமதி சிட்டு விற்பனைக்கான கவுன்ட்டர்கள் (ticket counter) நாள் முழுவதும் திறந்திருப்பதோடு, போதுமான எண்ணிக்கையிலான அனுமதி சிட்டு விற்பனைக்கான கவுன்ட்டர்கள் (ticket counter) திறக்கப்பட வேண்டும். அனுமதி சிட்டு விற்பனைக்கான கவுன்ட்டரில் (ticket counter) கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, முன் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்

திரையரங்குகளில், பொது மக்கள் அனுமதி சீட்டு (ticket) வாங்க வரிசையில் நிற்கும் போதும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கும் வகையில் தரையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்

திரையரங்கு வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கான வழிமுறைகள்


திரையரங்கு வளாகம் முழுவதும் அடிக்கடி கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்வதுடன், குறிப்பாக பொதுவான இடங்கள், பொதுமக்கள் அடிக்கடி தொடும் கதவு படிக்கட்டு கைப்பிடிகள் உள்ளிட்டவையும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.


திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி முடிவுற்ற பின்னர், உடனடியாக திரையரங்கு முழுவதும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

iii. அனுமதி சீட்டு வழங்கும் கவுன்ட்டர்கள் (ticket counter), உணவு மற்றும் குளிர்பானம் விற்பனை செய்யப்படும் பகுதிகள், பணியாளர்களின் வைப்பறைகள் (LOCKERS), கழிவறைகள், பொதுவான இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் திரையரங்கின் அலுவலகம் அமைந்துள்ள பகுதி ஆகியவை தொடர்ந்து முறையாக சுத்தம் செய்யப்படுவதோடு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட வேண்டும்.

iv. தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள், காலணிகள், முகக் கவசங்கள், தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். v. திரையரங்கில் எவருக்கேனும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால்,

திரையரங்கு வளாகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட வேண்டும். vi. திரையரங்குகளுக்கு வருகை புரிபவர்கள் | பணியாளர்கள் விட்டுச் செல்லும், முகக் கவசங்கள், கையுறைகள் ஆகியவை முறையாக அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்வதோடு, தூய்மை / சுகாதாரப் பணியாளர்களுக்கு திடக் கழிவு மேலாண்மை குறித்த விபரம் தெரிவித்து அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்க வேண்டும் திரையரங்குகளின் பணியாளர்களுக்கான வழிமுறைகள்

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் திரையரங்குகளின் பணியாளர்கள், தாங்கள் வசிக்கும் பகுதி நோய்க் கட்டுப்பாட்டு அல்லாத பகுதி என்ற அறிவிக்கை அரசால் வெளியிடப்படும் வரை பணிக்கு வரக்கூடாது

ii. அனைத்து பணியிடங்களிலும், பணியாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவே, பணியாளர்களுக்கு முகக் கவசம் வழங்கும் பொருட்டு, போதுமான அளவில் முகக் கவசங்கள் இருப்பில் வைப்பதற்கான ஏற்பாடுகளை திரையரங்கின் நிருவாகம் மேற்கொள்ள வேண்டும். கொரோனா நோய்த் தொற்றின் அபாயம் அதிகம் உள்ள பணியாளர்கள், அதாவது வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுடன் நேரடி தொடர்பு தேவைப்படும் எந்தவொரு பணியிலும் மேற்சொன்ன நபர்களை ஈடுபடுத்தக்கூடாது.

iii. பணியிடங்களில் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, திரையரங்குகளின் பொறுப்பாளர்கள், தங்களது பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்

iv. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்து கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், சுவாசம் சார்ந்த நெறிமுறைகள் மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருத்தல் ஆகியவை குறித்து பணியாளர்களுக்கு தெரிவிப்பதோடு பயிற்சியும் அளிக்க வேண்டும்.

V. அனைத்து பணியாளர்களும் தங்களது உடல்நலத்தை சுயமாக கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், தங்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடு தொடர்பாக உடனடியாக தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்

பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள்

1. இணைய வழியாக அனுமதி சீட்டு முன் பதிவு மேற்கொள்ளும் போதும், டிஜிட்டல் அனுமதி சீட்டுகள் மூலமும், கூடங்கள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட இடங்களிலும், கொரோனா.

இடைவெளிக்கான நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதையும், கூட்ட நெரிசல் தவிர்க்கப்படுவதையும், திரையரங்குகளின் நிருவாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

vi. பாக்கெட் (packed) செய்யப்பட்ட உணவு மற்றும் குளிர் பானங்கள் மட்டும் விற்பனை செய்யப்பட வேண்டும் vil. திரையரங்கிற்குள் உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்குவது தடை செய்யப்பட

வேண்டும்

vill உணவு மற்றும் குளிர்பான கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதை திரையரங்குகளின் நிருவாகங்கள் உறுதி செய்ய வேண்டும். உணவு மற்றும் குளிர்பான பகுதியில் பணிபுரியும் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் ix.

கையுறை அணிந்து பணிபுரிவதோடு இதர தேவையான முன் எச்சரிக்கை

நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேற்படி பணியாளர்கள் பயன்படுத்தும்

வகையில், கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட வேண்டும்

X.. திரையரங்கு வளாகத்தில், உணவு மற்றும் குளிர்பான பகுதியில் பணிபுரியும் பணியாளர் எவருக்கேனும் இருமல், சளி அல்லது காய்ச்சல் இருப்பின், அவர்களை திரையரங்கு வளாகத்திற்குள் அனுமதிக்காமல், அவர்கள் அரசு மருத்துவரை அணுகி, பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்த வேண்டும். இதனை ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்களில் (multiplex), வணிக வளாகங்களில் (shopping malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளின் மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்

xi. திரையரங்குகளில் அனைத்து செயல்பாடுகளின் போதும், கொரோனா வைரஸ் தடுப்பு மேலண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகள், மத்திய அரசின் உள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாது பின்பற்றப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.