Asianet News TamilAsianet News Tamil

“எங்க கண்ணீரை நீங்க தான் துடைக்கனும் அய்யா”... முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்த உருக்கமான கோரிக்கை..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாடு திரைப்பட சங்க தயாரிப்பாளர்கள் சங்கம் கொடுத்துள்ள கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளது.

Tamilnadu Film Producer sangam Give a petition to CM Edappadi palaniswami
Author
Chennai, First Published Feb 1, 2021, 2:24 PM IST

கொரோனா காலக்கட்டத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்த திரையுலகம், தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினாலும் மிகப்பெரிய முன்னேற்றங்களை எட்டவில்லை. இந்நிலையில் திரைத்துறையை காக்க வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த சங்கத்தின் முன்னாள் தலைவரான டி.ராஜேந்தர், தற்போதைய தலைவரான உஷா டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் கோரிக்கை மனுவை வைத்து அஞ்சலி செலுத்தினர். 

Tamilnadu Film Producer sangam Give a petition to CM Edappadi palaniswami

 

இதையும் படிங்க: அழகு பதுமையாய் மாறிய அனிகா... குட்டி நயனின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்தீங்களா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாடு திரைப்பட சங்க தயாரிப்பாளர்கள் சங்கம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், தமிழ் திரைப்படத்துறை இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தொழில் முற்றிலும் நசுங்கிவிட்டது. இத்தகைய சூழலில் தங்களுடைய தலைமையிலான அரசு தமிழ் திரைப்படத்துறைக்கு மறுவாழ்வு அளித்திட கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 1. அண்டை மாநிலங்களில் (LBT - Local Body Tax) உள்ளாட்சி வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தாங்களும் தங்களது அரசும் நீண்டநாள் கோரிக்கையான இந்த 8% LBT-யை முழுவதுமாக ரத்து செய்து தமிழ் திரைத்துறை மறுவாழ்வு பெற்றிட வழிவகை செய்யுமாறு கோருகிறோம்.

Tamilnadu Film Producer sangam Give a petition to CM Edappadi palaniswami

இந்த காலகட்டத்தில் திரையரங்குகள், தயாரிப்பாளர்கள். விநியோகஸ்தர்கள் என ஒட்டுமொத்த திரைத்துறை பலதரப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதிலிருந்து எப்படி கரையேறப் போகிறோம் என்ற வழித்தெரியாமல் திண்டாடி கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு Local Body Tax - யை ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் எப்படி ரூ.10 கோடிக்கும் கீழ் தயாரிக்கப்படும் படங்களுக்கு மாநில ஜி.எஸ்.டி. (SGST) -யை முழுவதுமாக விலக்கி சலுகை அளித்துள்ளார்களோ. அதேபோன்று தங்களது அரசும் ரூ.10 கோடிக்கும் கீழ் தயாரிக்கப்படும் படங்களுக்கு மாநில ஜி.எஸ்.டி (SGST)-யை முழுவதுமாக ரத்து செய்து தருமாறு கோருகிறோம்.

Tamilnadu Film Producer sangam Give a petition to CM Edappadi palaniswami

 

இதையும் படிங்க: விராட் கோலி - அனுஷ்கா சர்மா குழந்தைக்கு பெயர் வச்சாச்சு... மகளின் முதல் போட்டோவுடன் வெளியான ஹேப்பி நியூஸ்!

3. திரைத்துறையில் நீண்டநாள் பிரச்சினையான VPF (Virtual Print Fee) கட்டணத்தை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட அரசு டிஜிட்டல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முழுவதுமாக விலக்கு பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களுடைய அரசும் சரி, அம்மாவினுடைய அரசும் சரி பல வகையில் தமிழ் திரைத்துறைக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றன. அதை யாரும் மறுக்க முடியாது, இருப்பினும் தற்போது நடந்து வரும் கொரோனா எனும் இந்த பேரிடர் காலகட்டத்தில் குறிப்பாக எங்களுடைய திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட அனைவருமே முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான காலகட்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே. மேற்கண்ட கோரிக்கைகளை தங்கள் அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம். எங்களது துயரத்தை, கண்ணீரை துடைத்து எங்களது வாழ்வில் மறுஒளி ஏற்றிட வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios