tamilnadu chief minister release audio for vairamagan movie
பல்வேறு போராட்டத்திற்கு பின் தமிழக முதலமைச்சர் பதவியை கைப்பற்றியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள், வரிசைகட்டிக்கொண்டு நிற்கும் நிலையில், தன்னுடைய கவனத்தை தற்போது சினிமா விழாக்களிலும் செலுத்தி வருகிறார்.
இது வரை சினிமா துறை சார்த்த எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருந்த இவர், அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா துறை சார்த்த ஒரு சில வேளைகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதனை உறுதி படுத்தும் விதமாக, தற்போது 'முதல் மாணவன்' என்கிற படத்தை இயக்கி நடித்த கோபி காந்தி, தன்னுடைய இரண்டாவது படம் "வைரமகன்" என்கிற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க விவசாயிகளின் நிலையை கூறும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும்.
இதன் காரணமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த படத்தின் படங்களை வெளியிட கூறி அவரை அணுகியபோது அவரும் ஒத்துக்கொண்டார் என இந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கோபிகாந்தி கூறியுள்ளார்.
