கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் பாடலை அவதூறாகவும், கொச்சைப்படுத்தும் விதமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ் கடவுளான முருகனை கொச்சையாக அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்வாசன், சுரேந்தர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

 

இதையும் படிங்க:  ஸ்லிம் லுக்கில் செம்ம ஹாட்... ஐஸ்வர்யா ராஜேஷின் கவர்ச்சி போட்டோ ஷூட்டால் வாயடைத்து போன ரசிகர்கள்...!

தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டினார். இதனிடையே தமிழக பாஜகவின் முகநூல் பக்கத்தில் வெற்றிவேல் வீரவேல் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் எல்.முருகன் கமலாலயத்தில் அதனை வெளியிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: முதன் முறையாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி சைந்தவி... குவியும் லைக்ஸ்...!!

இதனை தயாரித்த கலை கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம், இசையமைப்பாளர் தீனாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த பாடலை உங்களுடைய செல்போன் ரிங்டோனாக பெற லிங்க் ஒன்றையும் பாஜகவினர் வழங்கியுள்ளனர். அந்த லிங்கை கிளிக் செய்து பாடலை ரிங்டோனாக வைத்துக்கொள்ள முடியும். இதோ அந்த லிங்க்...