ஸ்லிம் லுக்கில் செம்ம ஹாட்... ஐஸ்வர்யா ராஜேஷின் கவர்ச்சி போட்டோ ஷூட்டால் வாயடைத்து போன ரசிகர்கள்...!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள க/பெ ரணசிங்கம் பட டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ள அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படம் பெரிதாக ஹிட்டடிக்காவிட்டாலும், தெலுங்கு, தமிழில் பிசியாக நடித்து வருகிறார்.
படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண்ணாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர போட்டோஷூட்களில் மட்டும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.
நீண்ட நாட்களுக்கு முன்பு ஆங்கில பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஸ் கிளாமர் தூக்கலாக கொடுத்திருந்த போஸ்கள் தாறுமாறு வைரலானது.
இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.
உடலை இறுக்கி பிடித்திருக்கும் தங்க நிற உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை வாரிக்குவிக்கின்றனர்.
கால்களை மடக்கி அசத்தல் போஸ்