Tamilgun admin arrest in chennai

நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்று பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்ட போதும், தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்று பதவியை ஏற்றுக்கொண்ட போதும், நடிகர் விஷால் எடுத்துக்கொண்ட ஒரே சபதம் இதுதான்...! அது, தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் புதிய படங்களை தொடர்ந்து இளையதளங்களில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற வலைத்தளங்களை முடக்குவது தான் என சவால் விட்டுக் கூறினார்.

மேலும் இது தொடர்பாக நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரு தரப்பில் இருந்தும் காவல் துறையினருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று புதுப்படங்களை இணைய ஊடகங்களில் வெளியிட்டு வரும் தமிழ்கன் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

முன்னதாக, இதே போன்று சென்னையில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்பட்டார். தற்போது தமிழ்கன் அட்மினும் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.