தமிழ் திரையுலகில் தனக்கு என தனி இடம் பிடித்திருப்பவர் காமெடி நடிகர் சதீஷ், இவரது திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றுள்ளது. வைபவ் நடிப்பில் வெளியான சிக்சர் படத்தின் இயக்குநர் தங்கை சிந்துவை கரம் பிடித்துள்ளார் சதீஷ். நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சதீஷ் உடன் நடித்த நடிகர்கள் உட்பட திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

சதீஷ் - சிந்து நிச்சயதார்தத்தின் போது, இது காதல் திருமணமோ என சந்தேகம் எழுந்தது. அதனை முற்றிலும் மறுத்த சிந்துவின் அண்ணன் சாச்சி, இது முழுக்க, முழுக்க பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனிடையே நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது மனமார்த்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

விஜய்யுடன் நடித்த கத்தி திரைப்படத்தில் சதீஷின் காமெடி பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து வாழ்த்து தெரிவித்தார். பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு, ஐலியோனி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சதீஷ் - சிந்து திருமண வரவேற்பில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் #SathishWedsSindhu என்ற ஹேஷ்டேக்கில் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதே ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சதீஷ் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

குறிப்பாக சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினாவில் இருந்து பயணிந்து வருபவர் சதீஷ். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் இருக்கும் விதவிதமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.