சென்னை கொடுங்கையூரில் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக் 115வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு அக்கம் பக்கத்தில் வசித்து வந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்: 5 வருடத்திற்கு பின் 'என்னை அறிந்தால்' படத்தில் இருந்து வெளியான யாரும் பார்த்திடாத தல அஜித்தின் போட்டோஸ்!
 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொடுங்கையூர் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையறையில் அழுகிய நிலையில் ஆண் சடலமும், மற்றொரு அறையில் பெண் சடலமும் கிடந்தது. இருவருக்கும் 45 வயதில் இருந்து 50 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இரண்டு சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அந்த வீட்டை முற்றிலும் சோதனை செய்த போலீசாருக்கு 2 அடையாள அட்டைகள் சிக்கின. சின்னத்திரை நடிகர் சங்கத்தினருக்கான அந்த அடையாள அட்டையின் மூலம் தற்கொலை செய்து கொண்டது ஸ்ரீதர், அவரது தங்கை ஜெய கல்யாணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்ததும் தெரிந்தது. 

மேலும் செய்திகள்: பிரபல நடிகை மேக்னா ராஜின் காதல் கணவர் மரணம்! திருமணமான இரண்டே வருடத்தில் நேர்ந்த சோகம்!
 

இந்நிலையில், இவர்களை ஏன்? தற்கொலை முடிவை கையில் எடுத்தனர் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இதற்கான காரணத்தை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக அணைத்து படப்பிடிப்பு பணிகளும் நடைபெறாமல் உள்ளதால், சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர்கள் இருவரும், பண நெருக்கடியால் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். கடன் பிரச்னையும் இருந்ததாக கூறப்படுகிறது. வேலை இல்லாமல், சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு வந்த இவர்களுக்கு தொடர்ந்து கடன் சுமையும் கழுத்தை நெறுக்கியதால் மன அழுத்தம் காரணமாக இருவரும் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்: கே.ஆர்.விஜயா முதல் நயன்தாரா வரை..! அம்மன் வேடத்தில் யார் பெஸ்ட்?
 

ஏற்கனவே சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெறாததால், இந்தி திரையுலகை சேர்ந்த சில நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டு உயிர் விட்ட நிலையில், இவர்களுடைய தற்கொலை சம்பவமும் கோலிவுட் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.