TAMIL ROCKERS says they gonna release the upcoming movie on online first
காலா திரைப்படம் பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.
வரும் ஜூன் 7 அன்று உலகெங்கிலும் காலா திரையிடப்படவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாகவிருக்கும் இந்த படத்திற்காக, ரஜினியின் எமோஜி ட்விட்டரில் இன்று வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. முன்னதாக காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நந்தனம் YMCA மைதானத்தில் வைத்து பிரம்மாண்டமாக நடை பெற்றது.
அதனை தொடர்ந்து இப்போது காலா படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. அந்த ட்ரைலர் வீடியோ ஒரு பக்கம் மெகா வரவேற்புடன் முன்னேறிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ் ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது.
அதில் காலா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே, தமிழ் ராக்கர்ஸ்-ல் ரிலீசாகும் என் சவால் விடுத்திருக்கிறது . இப்போது படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் காலா குழுவிற்கு, இது மேலும் ஒரு தலைவலியாக இப்போது அமைந்திருக்கிறது.
