"OTTயில் வரும் வருமானத்தில் பங்கு" - புதிய கோரிக்கையை முன்வைத்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்
திரையரங்குகளில் திரையிடப்பட தயாரிக்கப்பட்ட படங்கள், OTT-யில் வெளியாகும் போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கை திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையை தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது முன்வைத்துள்ளனர்.

இது குறித்த வேண்டுகோள் மனு ஒன்றை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் கஜேந்திரன், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் தலைவர் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் முன்வைத்துள்ளனர்.
இதில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில்..
புதிய திரைப்படங்கள் வெளிவந்து எட்டு வாரம் கழித்து தான் OTT-யில் திரையிட வேண்டும்.
புதிய திரைப்படங்கள் வெளியான 4 வாரங்கள் கழித்து தான் OTT-யில் அதுகுறித்து விளம்பரம் செய்யப்பட வேண்டும்.
புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% தான் பங்கு தொகை கேட்க வேண்டும்.
திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை OTT-யில் திரையிடும்பொழுது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கை திரையரங்கிற்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல இவர்கள் தமிழக அரசிடம் விடுத்த கோரிக்கைகள் பினருமாறு..
திரையரங்குகளை பராமரிக்கும் கட்டணம், மற்று மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.
திரையரங்குகளில் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
மின்சார கட்டணங்கள், சொத்து வரி ஆகியவை திரைங்களுக்கு குறைத்து வசூலிக்க ஆவணம் செய்ய வேண்டும்.
ஏற்கனவே கொடுத்துள்ள கோரிக்கைகளை, அரசு மறு பரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்கங்களை வாழ வழி செய்ய வேண்டும்.
என்று பல கோரிக்கைகளை தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கம் முன்வைத்துள்ளது.