Tamil comedian asks memes creators to stop creating memes like this

யோகி பாபு தற்போது நடித்து வரும் அனைத்து திரைப்படங்களுமே, அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் தேடித்தந்திருக்கிறது. அவரின் காமெடி கலந்த நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்தில் ரிலீசாகிய ’கோலமாவு கோகிலா’ படத்தின் பாடல்களில் இவர் நயன்தாராவிடம் ப்ரபோஸ் செய்யும் ”எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சு டி” பாடலில், இவரது நடிப்பு இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது

இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த பாடலை பார்த்துவிட்டு இவரை பாராட்டாதவர்களே கிடையாது. தளபதி விஜய் கூட சமீபத்தில் இவரை பாராட்டி இருந்தார்.

காமெடி நடிகர்களின் டெம்பிளேட்டை வைத்து மீம்ஸ் போடுவது, மீம்ஸ் கிரியேட்டர்ஸின் வழக்கமான செயல். அவ்வாறு வெளியாகி இருக்கும் ஒரு மீம்ஸ் தான், யோகி பாபுவை கொஞ்சம் கடுப்பாக்கி இருக்கிறது.

Noo 😡😡
I’m a MumbaiIndians fan don’t do memes like this pic.twitter.com/sYJ6mlWqdR

— Yogi Babu (@YogiBabu_offl) May 22, 2018

அந்த மீம்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை கலாய்க்கும் படியாக இருந்தது. மேலும் அதில் யோகி பாபுவை, சி.எஸ்.கே தரப்பு வசனத்தை பேச உபயோகித்திருந்தனர். இதைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் ரசிகரான, யோகி பாபு “ நான் மும்பை இந்தியன்ஸ் ஃபேன், இந்த மாதிரி மீம்ஸ் இனி செய்யாதீங்க” என தனது டிவிட்டரில் கூறியிருக்கிறார்.