tamil cinema famouse actress avoid nadigarsangam protest

நடிகர் சங்க போராட்டம்:

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தை காக்கும் விதமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து கூட கோரியும் தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் ஒன்று கூடி இன்று மௌன அறவழி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் தற்போது அரசியல் களத்தில் கால் பதித்துள்ள ரஜினி, கமல் ஆகியோர் கலந்துக்கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். 

அதே போல், நடிகர் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு தங்களுடைய பங்களிப்பை அளித்தனர்.

நடிகர்கள் மட்டும் இன்றி, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், துணை நடிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்று தங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்தனர்.

போராட்டத்தை தவிர்த்த நடிகைகள்:

பல நடிகர்கள் கலந்துக்கொண்ட இந்த போராட்டத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் யாரும் கலந்துக்கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு தமிழ் ரசிகர்கள் வேண்டும் என என்னும் நடிகைகள் தமிழர்களுக்காகவும், தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கும் குரல் கொடுக்க வில்லை. 

இருப்பினும் நடிகை தன்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். 

இளம் நடிகைகள் பலர் இந்த போராட்டத்தை தவிர்த்தாலும், வயது முத்த நிலையிலும் நடிகை சச்சு, லதா, ஸ்ரீ பிரியா உள்ளிட்ட நடிகைகள் இந்த போராட்டத்திற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடவடிக்கை எடுக்குமா நடிகர் சங்கம்:

நடிகர்சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்புகள் என பலர் இணைதந்து நடத்திய இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.