‘மக்களே ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்க்கிறீர்களா? பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரித்து படம் எடுத்தவர்கள்தாம் பெரும்பாலும் ‘மி டு’ பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டுவருகிறார்கள்’ என்று ஒரு புதிய கோணத்தில் குண்டைத்தூக்கிப்போடுகிறார் நடிகை லேகா வாஷிங்டன்.

தமிழில் ‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘வெற்றிகொண்டான்’ ‘வா குவார்ட்டர் கட்டிங்’ உட்பட ஏழெட்டு தமிழ்ப் படங்களிலும், மற்றும் கன்னடம், இந்திப்படங்களிலும் நடித்துவரும் லேகா,  கங்கனா ரனாவத்தால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ‘குயின்’ பட  இயக்குநர் விகாஷ் பால் குறித்து தன் பங்குக்கு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

’’பீட்டர் கயா காம் சே’ படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்காக 3 ரவுண்டு ஆடிஷன் நடந்து இயக்குனரும், தயாரிப்பாளர்களும் என்னை தேர்வு செய்த பிறகு விகாஸ் பெஹல் அந்த முடிவை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தார். நீங்கள் மற்றும் அந்த பெண்ணில் யாரை தேர்வு செய்வது என்பது கடினமாக உள்ளது.என்றார் என் இடுப்பில் கையை வைத்தபடி. இப்படிப்பட்டவர் பெண்ணியம் சார்ந்த படங்களை  எடுப்பது தான் விந்தை’’ என்ற அடுத்த ஆபத்து துவங்குவதற்குள் அப்படத்திலிருந்து தப்பி வந்துவிட்டேன்’ என்கிறார். 

லேகாவின் இந்தித்திரையுலக அனுபவ ட்வீட் குறித்த பதிலளித்த ஒருவர் ‘அப்ப தமிழ் இண்டஸ்ட்ரி ரொம்ப யோக்கியமா? என்று கேள்வி எழுப்ப ‘அப்படியெல்லாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க. வெய்ட் பண்ணுங்க’ என்று பதில் அளித்திருக்கிறார்.