பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி படம்பிடிப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. திருவண்ணாமலையை சேர்ந்த இவர், நடிப்பதற்காக 1983-ம் ஆண்டு சென்னை வந்தார். பின்னர் புரொடக்ஷன் மேனேஜராக வாய்ப்பு கிடைத்தது. பல படங்களுக்கு புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றினார். கூடவே, சின்ன வேடங்களில் நடித்தும் வந்தார். தவசி, எல்லாம் அவன் செயல், நான் கடவுள் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

முக்கியமாக தவசி படத்தில் ``எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா” என்ற ஒற்றை வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஃபேமஸ் ஆனவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். நகைச்சுவை சீன்களில் இவர் பேசும் நடிகர் கிருஷ்ணமூர்த்தி பல வசனங்கள் இன்றும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவின் குமுளி அருகே நடந்த படப்பிடிப்பு தளத்தில் அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை படக்குழுவினர் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மறைந்த கிருண்மூர்த்திக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.