Tamil Bigg Boss A house of suspense drama and mystery

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜுலி சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர். அப்போராட்டத்தின் போது ''காணோம் காணோம் ஓபிஎஸை காணோம், வரச்சொல் வரச்சொல் ஓபிஎஸை வரச்சொல், கலாசலா கலசலா எங்கடி போன சசிகலா, சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ் எங்கம்மா என்ற இந்த கோஷம் விண்ணை முட்டியது. பல்வேறு கோஷங்களை அந்த இளம் பெண் எழுப்ப, அருகே நிற்கும் தோழிகளும் அதற்கு பதிலாக கோஷமிடுகிறார்கள். இந்த தைரியமான பெண்ணை தமிழக ஊடகங்கள் தூக்கிப்பிடித்து. 

அதன் பின் அவரது மீது அரசியல் சாயம் பூசப்பட்டது. அப்போது அவர் நான் மிக மிக சாதாரணப் பெண். அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தமிழ் உணர்ச்சியோடு, தமிழ்நாட்டுக்காக பேச வந்தேன். தனி ஆளாக மெரீனா போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்று கூறியிருந்தார். அவருக்கு ஆதரவும் பெருகியது. இந்நிலையில் அவர் பிரபலங்களோடு, பிரபலங்களாக Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

மெரினாவில் நடந்த ஜல்லிகட்டுப் போராட்டத்தில் வீர தமிழச்சியாக சித்தரிக்கப்பட்ட இதே ஜூலி முதல் எபிசோடில் செய்த காரியம் பார்வையாளர்களின் மனநிலையை மாற்றியது. சக பங்கேற்பாளரான இளம் நடிகர் ஸ்ரீ அந்தப்பக்கம் வந்தபோது ஏன் இப்படி சோகமா இருக்கிறீங்க "ஒவ்வொருத்தரும், கட்டிப்புடிக்குறாங்க, எனக்கு யாருமே இல்லை என் நிலைமய கொஞ்சம் யோசிச்சுப்பாரு..." என்று பகீர் ரக பேச்சு பேசினார் ஜூலி. மேலும், என்னை விட்டு போய்விடாதே என்று அன்புக்கட்டளையிட்டார். அந்த நேரம் அந்தப்பக்கம் சக போட்டியாளர் ஒருவர் நடந்து சென்றதால் பார்வையாளர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

இதனையடுத்து நேற்றய எபிசோட்டில் யாரை வெளியேற்ற நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்கப்பட்டது. பிக் பாஸ் குடும்பத் தலைவனான சினேகன் சொன்னபோது 'ஜூலி எல்லோரையும் அதிகமாக பேசுகிறார். எதையும் முறையாக கேட்பதில்லை’ என்று சொல்லி அவரை நாமினேட் செய்ய வேண்டும் என்றார். அவரது கருத்தையே பெரும்பாலானோர் பிக் பாஸிடம் சொல்ல. மாறாக ஜூலி, கணேஷ் வெங்கட்ராமிடம் கதறி அழுது தனது ஆதங்கத்தை புலம்பி தீர்த்தார். ‘நான் ஜெயிக்கக் கூடாது என்று அனைவரும் இவ்வாறு செய்கிறார்கள்’ என்று கதறி அழுதது மட்டுமல்லாமல், தனியாக கேமெரா முன்பு நின்றுகொண்டு சோகமாக பேசுவது சற்று யோசிக்க வைத்துள்ளது.

இது மட்டுமல்ல தைரிய பெண்மணியான இந்த ஜூலி பேச்சும், உடல்மொழியும், நட்புரீதியிலான பேச்சுமாதிரி தெரியவில்லை என அவர்கள் ஆதங்கம் வெளிப்படுத்தி வருகிறார்கள். மெரீனாவை கலகலக்கவைத்த இந்த தைரிய லட்சுமி இப்போது கண்ணீர் விட்டு எனக்கு நண்பர்கள் இல்லை என்று கூற வந்ததை இப்படி ஜூலி கூறியிருக்கலாம், அல்லது ரேட்டிங்க்காக இப்படி பேச வைத்திருக்கலாம் என்ற கருத்துக்களும் பரவி வருகிறது. இன்னும் 98 நாட்களுக்குள் தங்களது ரேட்டிங்கை எகிறவைக்க இந்த ஜல்லிக்கட்டு வீர மங்கையை பலி ஆடாக்கி என்னென்ன வித்தையெல்லாம் காட்டப்போகிறார்களோ என பார்வையாளர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.

வீரப்பெண்மணியாக காணப்பட்ட இந்த ஜூலி, உழைப்பாளிகளின் வியர்வை, புரட்சி சிவப்புத்துண்டுன்னு கமலையே மிரளவைத்து உள்ளே போன புரட்சிப்பெண் இப்போது அழுகை நாடகத்தின் முதல் நாயகியானார்! இந்த வீரப்பெண்ணின் ஆளுமை குணம், ஆர்ப்பாட்டம் , படோடபம் , உணர்ச்சி குவியலில் இல்லை. கிராமத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு வாழ்வதும் ஆளுமைதான். 

ஆக, டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு பலியான முதல் ஆடு என்று சொல்லலாம்!