Tamil audio song got 45 million and more viewers on you tube

அட்லீ இயக்கத்தில் ,தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படத்தின் டீசர், டிரெயிலர், எமோஜி என பல விஷயங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் , அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டும் சாதனைகளை படைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதே போல இந்த திரைப்படம் வசூலிலும் பட்டையை கிளப்பியது. 250 கோடிக்கும் மேலாக வசூல் செய்து அதிகம் வசூல் வேட்டை நடத்திய விஜய் படங்களில் மெர்சல் மிக முக்கியமான இடத்தை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ”ஆளப்போறான் தமிழன்” பாடல் தமிழ் திரையுலகையே ஒரு கலக்கு கலக்கியது மட்டுமல்லாமல், ரிலீசான போதே பல சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தது.

தற்போது இணையத்தில் இந்த பாடலுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை 45 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. இதனால் மேலும் ஒரு சாதனையை படைத்திருக்கிறது மெர்சல். மெர்சலின் இந்த தொடரும் வெற்றி விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகமடையச் செய்திருக்கிறது