Tamil actress open talk about virginity

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் ஒரு காமெடி கலந்த பேய் படமாக இருந்தாலும், அதில் இடம் பெற்றிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களால், ஒரு அடல்ட் ஒன்லீயாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. என்ன தான் மகா மோசமான விமர்சனங்கள் வந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வசூலில் அள்ளிக்கொண்டு தான் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே சர்ச்சைக்கு பெயர் போன இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவரான யாஷிகா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் கருத்து , தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அதில்”ஆண்கள் எப்படி திருமணத்திற்கு முன் தங்கள் கற்பை இழக்கிறார்களோ, அதே போல பெண்களும் திருமணத்திற்கு முன் தங்கள் கற்பை இழக்கலாம்” என மிகவும் வெளிப்படையாக யாஷிகா பதிலளித்திருக்கிறார். அவரின் இந்த வெளிப்படையான பேட்டி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை போலவே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.