இந்தியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையை துவங்கி உள்ளனர். 

அந்த வகையில், கடந்த சனி கிழமை நடைபெற்ற, 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ' சதீஷ் சிவலிங்கம்' தங்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளார். 

இந்த போட்டிகள் ஒரு பக்கம் மிகவும் பரபராப்பக நடைபெற்று வந்தாலும், மற்றொரு பக்கம், தாய்லாந்து நாட்டில் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

இதில் நடைப்பெற்ற, சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துக்கொண்ட நடிகர் மாதவன் மகன் வேதாந்த் பதக்கம் வென்றுள்ளார். இந்த தகவலை நடிகர் மாதவன் தன்னுடைய சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். 

மேலும் இதில் இந்தியாவிற்கு தன்னுடைய மகன் நீச்சல் போட்டியின் மூலம் முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார் என்றும் தானும் தன்னுடைய மனைவி சரிதாவும் பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் பெற்றுள்ள நடிகர் மாதவனின் மகனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.