நடிகர் விஜய்க்கு தம்பியாக ஜில்லா படத்திலும், அஜித்துடன் மங்காத்தா, படத்திலும் நடித்து ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர் இளம் நடிகர் மஹத். இந்த படங்களை தொடர்ந்து வடகறி, பிரியாணி, சென்னை 28 பார்ட் 2  உள்ளிட்ட பல படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். 

தற்போது தமிழ் திரைப்படங்களை தாண்டி தெலுங்கில் நடித்து வருகிறார். இவர் ஏற்க்கனவே நடிகை டாப் சியை காதலிப்பதாக கிசுகிசுக்கப் பட்டது. பின்னர் இவர்கள் இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் இவர் பாலிவுட் நடிகை பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. பிராச்சி மிஸ்ரா கடந்த 2012  ஆம் ஆண்டு மிஸ் இந்தியா எர்த் பட்டம் வென்றவர். இவர் துபாய் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் பிராச்சி மிஸ்ரா துபாயில் தொழிலதிபராகவும் இருக்கிறார். அவ்வப்போது இந்தி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் அதில் நடித்து வந்தார். மஹத் சென்னையில் இருந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருடைய குடும்பத்தினர் துபாயில் தான் வசித்து வருகின்றனர். 

இதனால் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துபாய் சென்று தன்னுடைய காதலை வளர்த்து வந்தார் மஹத், இந்நிலையில் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இவர்களுடைய காதலை உறுதி செய்துள்ளது.