நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க இந்தியன் 2 படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி, கமல்ஹாசனுக்கு தேசிய விருதை பெற்று தந்த திரைப்படம் இந்தியன். இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில், கஸ்தூரி என பலர் நடித்திருந்தனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு, வசூலையும் வாரிக்குவித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்தாண்டு முடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, அதன்பின் பல்வேறு பிரச்சனை காரணமாக இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவில்லை.

தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து, மீண்டும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. அப்படி தொடங்கப்படும் போது நடிகை காஜல் அகர்வால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது. அவர் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், காஜலுக்கு பதிலாக நடிகை தமன்னாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை தமன்னா தற்போது முதன்முறையாக கமலுடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.