உலக நாயகன் கமலின் 65 வது பிறந்தநாள் மற்றும் 60 வது ஆண்டு கலையுலக சாதனையை முன்னிட்டு நடந்த இளையராஜா இசை நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். நேற்று மாலை  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, வடிவேலு, விக்ரம் பிரபு, நடிகைகள் லதா, ஸ்ரீபிரியா, மீனா, ரேகா, ராதா, அம்பிகா, மனிஷா கொய்ராலா, தமன்னா, லிசி, குட்டி பத்மினி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர்,பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் அனைவரும் களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி விஸ்வரூபம் 2 வரை கமல் ஹாசன் செய்துள்ள புதுமைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் என்னையும் கமலையும் யாராலும் பிரிக்க முடியாது என அவரது ஸ்டைலில் பஞ்ச் டைலாக் பேசி மாஸ் காட்டினார். 

விழாவிற்கு வந்த அனைவரும் இசை நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில், சத்தமே இல்லாமல் நடிகை தமன்னா செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

கிரே நிற ஒன்சைடு ஸ்லீவ் லெஸ் உடையில்  விழாவிற்கு வந்திருந்த தமன்னா, அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். அதோடு இல்லாமல் தன்னோடு முந்தைய படங்களில் விஜய் சேதுபதி, கார்த்தி ஆகியோருடன் செல்ஃபி எடுத்துள்ளார். அதிலும் உலக நாயகன் கமல் ஹாசனுடன் தமன்னா எடுத்துக் கொண்ட செல்ஃபி லைக்குகளை குவித்து வருகிறது.