விக்ரம், திரிஷா நடிப்பில் ஹரி இயக்கத்தில், தமிழ் திரையுலகையே அதிரடியாக கலக்கிய திரைப்படம் சாமி. இந்த திரைப்படம் கொடுத்த அதிரடி வெற்றியை தொடர்ந்து, தற்போது சாமி திரப்படத்தின் இரண்டாம் பாகம், சாமி ஸ்கொயர் எனும் பெயரில் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீசாகியது.

டிரெயிலரின் ஒவ்வொரு சீனிலும் எக்கச்சக்க மாஸ் காட்டி இருக்கிறார் ஹரி. அதற்கு ஏற்ப வெறித்தனமாக நடித்திருக்கிறார் விக்ரம். சாமி படத்தில் பார்த்த விக்ரமிற்கும், இந்த ஸ்கொயரில் பார்க்கும் விக்ரமிற்கும் நிஜமாகவே நல்ல வேறுபாடு தெரிகிறது. அந்த வகையில் கோபத்திலும், ஆக்ரோஷத்திலும், சாமி ஸ்கொயர் தான்.

சாமி படத்தின் ஹைலைட்டே விக்ரம் பேசும் வசங்கள் தான். அதே ஃபார்முலாவை தான் சாமி ஸ்கொயரிலும் கையாண்டிருக்கிறார் ஹரி என்பதை, டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. ஆனால் சாமி ஸ்கொயர்-ல்,  பஞ்ச் வசனங்கள் ஒன்றும் பாராட்டும் படியாக இல்லை. ”நான் சாமி இல்ல பூதம்” என விக்ரம் பேசும் பஞ்ச் கூட ஓகே. ஆனால் ”நான் தாய் வயித்தில பிறக்கல. பேய் வயித்தில பிறந்தேன்” பஞ்ச் டயலாக் கொஞ்சம் டூ மச்.

டிரைலரில் இடம் பெற்றிருக்கும் காட்சிகளை வைத்து பார்க்கும் போது, இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ராஜஸ்தானில் வைத்து நடப்பது போல தெரிகிறது. இதில் ஒட்டகம் மேல் வைத்து நடக்க கூடிய சண்டை காட்சியெல்லாம் வேறு இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் அழகாகவும் அளவாகவுமே தெரிகிறார் இந்த ட்ரெயிலரில். பஞ்ச் வசனத்தில் ”நான் பூதம் பேய்க்கு பிறந்தவன்” அப்படின்னு சொன்னதனாலயோ என்னவோ, டிரெயிலர் எஃபெக்ட் எல்லம் பேய் படம் மாதிரியே தான் இருக்குது. பாபி சிம்ஹாவை பார்க்கும் போது, கோட்டா சீனிவாச ராவ் தான் நியாபகத்துக்கு வருகிறார். என்ன அவர் கூலா இருப்பார். இவர் கோபமா இருக்கார். மத்தபடி எப்போதும் போல நடித்திருக்கிறார் பாபி சிம்கா.

ஆகாயத்தில இருந்து பூமியை சுத்தி சுத்தி படம் பிடிச்ச மாதிரி, காரில் ஒரு சண்டை காட்சி அதுவும் பாலைவனத்தில் வைத்து நடக்குது. இதையெல்லம் பாக்கும் போது, ஆக்‌ஷன் ரசிகர்களுக்கான சரியான ஆக்‌ஷன் விருந்தாக இருக்கும் இந்த சாமி ஸ்கொயர் என தெரிகிறது.