மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தங்களா ஏன்னு அளவிற்கு செக்கச்சிவந்த அழகை கொண்டவர் டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி என பன் மொழிகளில் முன்னணி நாயகியாக உள்ளார். இவர் சமீபத்தில் கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி உள்ளிட்ட ஹாரர் மூவிகளில் தோன்றியிருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். ஹிந்தி மொழியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். வயாகாம்18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில்,டாப்ஸி பண்ணு டைட்டில் ரோலில் நடிக்கிறார்.

இந்த படத்தின் வெளியீட்டு தேதியை டாப்ஸி பண்ணு மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஷபாஷ் மிதுவின் அறிவித்தனர். படம் பற்றி பேசுகையில், மிதாலி ராஜி 8 வயது குழந்தையாக கனவுடன் இருக்கும் பயணத்தை இந்த படம் காட்டுவதாக கூறியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
