சமீபத்தில் ரிலீஸான அனுராக் காஷ்யப்பின்  ‘மன்மர்ஸியான்’ இந்திப்படத்தின்  மூலம் பாலிவுட்டின் ஹாட் ஹீரோயின்கள் லிஸ்டில் இடம் பிடித்த டாப்ஸி பொண்ணு மூன்று ஆண்டுகால இடைவெளிக்குப் பின் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு திரும்பியிருக்கிறார். 

வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகாமாகி ஒரே படத்தில் உச்சிக்குப்போன டாப்ஸி அடுத்து தெலுகு, மலையாளம்,இந்தி என மூன்று மொழியில் மும்முரமான நடிகையானார். இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அடுத்து மும்பையில் படுபிசியாகிவிட்ட அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். கடைசியாக அவர் தமிழில் நடித்து வெளியான படம் ‘காஞ்சனா3’. 

இந்நிலையில் மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கும் அவர் ‘கேம் ஓவர்’ என்கிற ஹீரோயின் சப்ஜெக்டில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். காலில் கட்டுடன் டாப்ஸி ஒர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்துப் பார்த்தால் ஒரு பழிவாங்கும் கதை என்று தெரிகிறது.

 

‘மாயா’ ‘இறவாக்காலம்’ படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். ‘தமிழ்ப்படம்’ இரண்டு பாகங்களையும் தயாரித்த ஒய்நாட் ஸ்டியோஸ் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. தமிழ்ப்படங்களில் டாப்ஸி தொடர்ந்து ஆர்வம் காட்டாமல் போனதற்கு கடைசியாய் அவர் நடித்த ‘காஞ்சனா 3’ல் அவர் பட்ட அவஸ்தைகள்தான் காரணம் என்ற செய்திகள் நடமாடியது உண்டு. விரைவில் ‘METOO’ ஹேஸ் டாக்கில் டாப்ஸி லாரன்சின் பெயரை அம்பலப்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.