தன்னுடைய இளைய மகள் குறளரசனின் திருமண பத்திரிக்கையை இன்று உலகநாயகன் கமல்ஹாசனை, அவரது வீட்டில் சந்தித்து வழங்கினார் டி.ராஜேந்தர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட, டி.ராஜேந்தரின் இரண்டாவது மகனுக்கு தற்போது திருமண ஏற்படுகள் மும்புரமாக நடந்து வருகிறது.

இதனால், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை நேரடியாக சந்தித்து, டி.ராஜேந்தர் மற்றும் அவருடைய மகன் குறளரசன் ஆகியோர் திருமண பத்திரிக்கைகளை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவரகுமார் உள்ளிட்ட பிரபலங்களை நேரில் சந்தித்து திருமண பத்திரிக்கையை கொடுத்து வருகிறார். அதை தொடர்ந்து இன்று உலகநாயகன் கமல்ஹாசனை அவருடைய வீட்டில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.  மக்கள் நீதி மய்யம் கட்சி, நேற்று நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில் போட்டியிடுவதால், அரசியல் வேலைகளில் கமல்ஹாசன் பிஸியாக இருந்தார். இதனால் சற்று தாமதமாக டி.ராஜேந்தர்  கமலஹாசனை சந்தித்ததாக கூறப்படுகிறது.