தன்னுடைய இளைய மகள் குறளரசனின் திருமண பத்திரிக்கையை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, வீட்டில் சந்தித்து வழங்கினார் டி.ராஜேந்தர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட, டி.ராஜேந்தரின் இரண்டாவது மகனுக்கு தற்போது திருமண ஏற்படுகள் மும்புரமாக நடந்து வருகிறது.

இதனால், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை நேரடியாக சந்தித்து, டி.ராஜேந்தர் மற்றும் அவருடைய மகன் குறளரசன் ஆகியோர் திருமண பத்திரிக்கைகளை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்றைய தினம், தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை சந்தித்து திருமண பத்திரிக்கையை கொடுத்தனர். அதை தொடர்ந்து இன்று சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய வீட்டில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களையும், அரசியல் வாதிகளையும், நண்பர்களையும் சந்தித்து திருமண பத்திரிக்கை கொடுக்கும் வேலையில் பிஸியாக இருக்கிறார் டி.ராஜேந்தர்.