ஆண்டின்னு கூப்பிட்டது தவறா..? நிகழ்ச்சியிலேயே சிறு குழந்தையை திட்டி தீர்த்த நடிகை..! 

தன்னை ஆண்டி என அழைத்த 4 வயது குழந்தை நட்சத்திரத்திடம் கோபப்பட்டு நடிகை ஸ்வாரா கடுமையாக பேசி உள்ள வீடியோ சமுக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, #Swara_aunty மற்றும் #SwaraAunty என்ற இந்த இரண்டு ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

ஹிந்தியில் சோன் ஆப் அபிஷின் என்ற விவாத நிகழ்ச்சியில் 4 வயது குழந்தை கலந்துகொண்டது. அப்போது நடிகை ஸ்வாரா பாஸ்கரை ஆண்டி என அழைத்துள்ளது குழந்தை நட்சத்திரம். இதனை கேட்டு கோபம் அடைந்த நடிகை குழந்தையிடம் கோபமாக பேசி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்ததோடு மேலும் வெறுப்படையும் வண்ணமாக ஆண்டி என்ற சொல்லை  வைரலாகி வருகின்றனர்

இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கும் போது, அவர் தனியாக தான் திட்டினார்   குழந்தையின் முன் திட்டவில்லை என விளக்கம் அளித்து உள்ளது. வீடியோவில் குழந்தையை இந்தியில் இரண்டு கடும் சொற்களை கூறி திட்டி உள்ளார். ஸ்வாராவைப் பொறுத்தவரை, அவர் குழந்தையின் முன்னால் வார்த்தைகளைச் சொல்லவில்லை என்று செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும் சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தில் இது குறித்து புகார்  தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.