கொஞ்ச காலமாக எந்த ட்ரெண்டிங் செய்தியிலும் தன் பெயர் இடம் பெறாததாலோ என்னவோ யோகிபாபுவின் படம் ஒன்று தொடர்பான சப்ப மேட்டருக்கு நித்யானந்தா கோஷ்டி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

"நடிகர் யோகிபாபு, வருண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பப்பி’. முரட்டு சிங்கிள் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகர் ஒருவர் ஒரு பக்கமும் இன்னொரு பக்கத்தில் நித்தியானந்தாவும் இருந்தவாறு டிசைன் அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிவசேனாவை சேர்ந்த செல்வம் என்பவர் காவல் துறை கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்த்திருந்தார். அதில், ஆபாச படங்களில் நடித்த ஜான்சின்ஸ் என்பவரையும் இந்துமத பிரச்சாரங்கள், போதனைகளில் ஈடுபட்டு வரும் சுவாமி நித்தியானந்தாவையும் இணைத்து இவர்கள் வெளியிட்டதால் பெரும்பாலான இந்துக்கள் மனதை புண்படுத்தியுள்ளது. இதனால் இயக்குநர் முரட்டுசிங்கிள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது நித்தியானந்தா தரப்பிலிருந்து பப்பி குழுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில்  உலக புகழ்ப் பெற்ற ஆன்மீகவாதியுடன், அடல்ட் ஆர்டிஸ்டிஸ்டை சேர்ந்து விளம்பரம் செய்வது தவறு. ஆகையால் அதை உடனே நீக்கிவிட்டுப் படத்தை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்யாத பட்சத்தில் படத்துக்கு தடை கோரி கோர்ட்டுக்குச் செல்லவேண்டிவரும் என்றும் அந்த நோட்டீஸ் மூலம் எச்சரித்துள்ளனர்.