டைகர் ஜிந்தா ஹை படத்தில் இடம்பெற்ற ஸ்வாக் சே ஸ்வா கத் என்ற பாடல் இந்தியாவில் வேறு எந்த திரைப்பட பாடலும் செய்ய முடியாத சாதனையை யூடியூபில் நிகழ்த்தியுள்ளது. இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கிய டைகர் ஜிந்தா ஹை திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிகை கத்ரினா கைப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் உலக அளவில் 580 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. , இந்தப் படத்திற்கு விஷால் ஷே கார் ஆகியோர் இசையமைத்திருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக swag se swagat என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்ததுடன் ஆட்டம் போட வைக்கும் வகையில் இருந்தது. இந்தப் பாடலில் சல்மான் கானும் கத்ரீனா கைஃப் பும் மிகவும் ஸ்டைலாக காட்சியளிப்பர். அழகான லொக்கேஷன் துள்ளலான இசை ஆடவைக்கும் பீட் என அனைத்து அம்சங்களும் இந்தப் பாடலில் ஒருங்கே அமைந்து இருந்தது. இதுவே இப்பாடலை மீண்டும் மீன்டும் ரசிகர்களை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் தூண்டியது. 

பாடலை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு யூடியூப்பில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், பார்வையிட்தற்கான கணக்கு 20, 30 கோடி என மளமளவென உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது இந்தப் பாடல் 60 கோடி முறை யூடியூபில் பார்க்கப்பட்டுள்ளது. இது இதற்கு முன் வேறு எந்த ஒரு இந்திய திரைப்படத்தின் பாடல் செய்யாத சாதனை ஆகும்.  

60 கோடியை தாண்டி யும் இன்னும் லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டு வருகிறது இந்த பாடல். 60 கோடி முறை யூட்யூபில் ஒரு பாடல் பார்க்கப்படுவது இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத ஒரு மைல் கல் என்றே கருதப்படுகிறது. இந்த சாதனையால் டைகர் ஜிந்தா ஹை படத்தை தயாரித்த ய ஸ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நிற்கிறது. இத்துடன் அந்தப் பாடல் 10 நொடி ஆடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பதிவில் நடிகர் சல்மான் கான் நடிகை கத்ரீனா கைஃப், இசையமைப்பாளர்கள் விஷால் சேகர், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோரின் பெயர்கள் டாக் செய்யப்பட்டுள்ளன.