சென்னையில் பல சினிமா பிரபலங்களை நூதன வகையில் ஏமாற்றிய 26 வயது இளம்பெண், அடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த ஸ்வேதா சுரேஷ் என்ற இவருக்கு திருமணம் ஆகி 3 வயது குழந்தை உள்ளது, இவர் பல சினிமா பிரபலங்கள் உள்பட உலகம் முழுவதும் பயணம் செய்ய சலுகை விலையில் விமான டிக்கெட் எடுத்துத் தருவதாக ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். 

இவரிடம் ஏமாந்தவர்களில் பிரபல பாடகர் தேவன் ஏகாம்பரம், எஸ்.வி.சேகர் ஆகியோர்களும் அடங்குவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பேஸ்புக் மூலமும், நேரிலும் பிரபலங்களை அணுகி உலகம் முழுவதையும் விமானத்தில் சுற்றி பார்க்க ரூ.1.25 லட்சத்த்ல் விமான டிக்கெட்டுக்களை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு காலாவதியான டிக்கெட்டுக்களை கொடுத்து ஏமாற்றியுள்ளார். 

இதுகுறித்து காவல்துறையினர்களிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஸ்வேதா சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இபிகோ 406,420 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.