Asianet News TamilAsianet News Tamil

சிம்புவுக்கு ஆதரவாக களத்துல குதித்த எஸ்.வி.சேகர்!! ட்விட்டரில் வாக்கு வாதம்!

பாலபிஷேகம், செய்யுங்கள் என கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறி செய்தியாளர் சந்திப்பில் சிம்பு பேசியுள்ளதற்கு, நடிகரும், இயக்குனருமான, எஸ்.வி.சேகர் தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் ட்விட் போட்டுள்ளார்.
 

sv sekar support simbu speech
Author
Chennai, First Published Jan 28, 2019, 12:44 PM IST

பாலபிஷேகம், செய்யுங்கள் என கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறி செய்தியாளர் சந்திப்பில் சிம்பு பேசியுள்ளதற்கு, நடிகரும், இயக்குனருமான, எஸ்.வி.சேகர் தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் ட்விட் போட்டுள்ளார்.

பொதுவாக தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது, ரசிகர்கள் பாலபிஷேகம், மற்றும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கட் அவுட் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

sv sekar support simbu speech

இதனால் நடிகர் சிம்பு சமீபத்தில் 'வந்தா ராஜாவைத்தான் வருவேன்' படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 1 என்பதை உறுதி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தன்னுடைய ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார். 

அதில் கூறியிருந்தாவது... "தனக்கு பிலெக்ஸ், பேனர், கட் அவுட், மற்றும்  பாலாபிஷேகம் செய்ய வேண்டாம். அந்த பணத்தில் உங்கள் அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு ஒரு ஷர்ட், மற்றும் தங்கை, தம்பிக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுங்கள். முடிந்தால் அதனை போட்டோ எடுத்து பதிவிடுங்கள். இதை விட எனக்கு பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார்.

sv sekar support simbu speech

சிம்புவின் இந்த வேண்டுகோளையும்,  சிம்புவையும் கிண்டல் செய்யும் வகையில்.. சிலர் இல்லாத ரசிகர்களுக்கு சிம்பு ஏன் இப்படி வேண்டுகோள் வைக்கிறார் என கூறினர்.   

இதுபோன்ற தொடர் விமர்சனங்களால் கடுப்பான சிம்பு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவு பேனர்களை வைக்க வேண்டும், அண்டாவில் பால் கொண்டு வந்து ஊற்ற வேண்டும் என தெரிவித்தார். அந்த வீடியோ சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சிம்பு மாற்றி மாற்றி பேசுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். 

sv sekar support simbu speech

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார். இன்று மரணமடைந்த தன்னுடைய ரசிகரின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தை பார்த்து ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கட் அவுட் வைக்கும் போது ஏற்பட்ட பிரச்னையில் எனது ரசிகர் இறந்ததால் நான் வேதனையில் இருந்தேன். அதனால் தான் பால் அபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அது எல்லாரையும் சென்றடையவில்லை. பின்னர் நெகட்டிவாக கருத்து சொன்னேன் என்று தெரிவித்துள்ளார்.

sv sekar support simbu speech

மேலும், பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். படம் பார்க்க வருபவர்களுக்கு அண்டா நிறைய பால் காய்ச்சு ஊற்றுங்கள் என்றுதான் சொன்னேன். நான் மாற்றிப் பேசவில்லை, எல்லாரையும் மாற்ற வேண்டுமென்றுதான் பேசுகிறேன். இப்போதும் சொல்கிறேன். அண்டா நிறைய பால் ஊற்றுங்கள். பேசாத கட் அவுட்டுக்கு ஊற்றாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு கொடுங்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறியதை மறப்பவன் இல்லை நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அது யார் என தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

தற்போது இவரின் இந்த பேச்சுக்கு தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர். இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறியுள்ளது.. "40 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகும் ஒரு இளம் கதா நாயகன் சிம்புவை கலாய்ப்பதாக நினைத்து அபத்தமாக போடப்பட்ட பதிவின் எதிர்வினையே சிம்புவின் பதில். சினிமாவில் இருக்கும் சிலர்   அபூர்வமாக அறிவுபூர்வமாக பேசினால் உணர்சிமிகுதியில் அதிர்ச்சி அடைகிறார்கள். MY SUPPORTS TO சிம்பு". என பதிவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios