sv sekar resignation for nadigar sangam designation
சமீபத்தில் தான் நடிகர் பொன்வண்ணன் தான் வகித்து வந்த நடிகர் சங்க துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு காரணம் நடிகர் விஷால், அரசியலில் கால் பதிக்க நினைத்தது தான் என கூறப்பட்டது. இதை தொடர்ந்து விஷால் மற்றும் அனைத்து நடிகர் சங்க நிர்வாகிகளும் பொன் வண்ணனிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின் அவர் தன்னுடைய ராஜினாமாவை திரும்பப்பெற்றார்.

இந்த பிரச்சனை துவங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது, நடிகர் சங்கத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் வகித்து வரும் ட்ரஸ்டி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதில், விஜயகாந்த் பதவி வகித்தபோது எந்த நடிகரையும் விமான நிலையம் வரை வரவழைத்து திருப்பி அனுப்பியதில்லை என பெருமையாக பேசினார். ஆனால் தற்போது இயங்கி வரும் நடிகர் சங்கத்தில் ஒரு நடிகருக்கு அப்படி நடந்துள்ளது. அவர் அவமானப்படுத்தப் பட்டுள்ளார்... என கூறி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
