'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' , போக்கிரி ராஜா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் 'ராம்பிரகாஷ் ராயப்பா' தற்போது இயக்கியுள்ள திரைப்படம் "சுட்டுப்பிடிக்க உத்தரவு" இந்த  படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் , சுசீந்திரன், மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தமிழில் கருத்துள்ள படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் சுசீந்திரன் இப்படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகியுள்ளார். 

மேலும் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும்என இயக்குனர் சுசீந்தரன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படம் வெளியாகும் அன்று நடிகை நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம், சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, கேம் ஓவர் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…