கன்னட படங்களில் முன்னணி ஹீரோவாக வளம் வருபவர் நடிகர் சுதீப்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் 'ஈ' படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகம் கொடுத்தார். பின் விஜய் நடித்த 'புலி' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார்.

இந்த படத்தில் விஜயின் நடிப்பை விட இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. 

அதே போல் முதல் முதலாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'முடிஞ்சா இவன புடி' படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடதக்கது.

இவர் நடிப்பது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகிஸ்தர் என பல, திரையுலகம் சார்த்த வேலைகளை செய்து கலக்கி வருகிறார்.

இதற்கிடையே தற்போது சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இவர் தயாரிக்க இருக்கும் கன்னட சீரியலுக்கு 'வார்சதாரா' என்று பெயரிட பட்டுள்ளது, இந்த சீரியலை, கன்னட திரைப்பட இயக்குனர் கட்டாவிஜி இயக்குகிறார்.இதை கன்னட ஜீ தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.