இயக்குனர் சுசீந்திரன், நடிகர் ராம் சரணை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ‘அறம் செய்து பழகு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுளளது.

இந்தப் படத்தை அடுத்து சுசிந்திரன் ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார். அதில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரண் தேஜாவை நடிக்க வைக்க போறாராம்.

மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் என்று தகவல் கசிந்துள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.