என் கணவர் எப்போது, எங்கு, எப்படி உன்னிடம் அத்துமீறினார்? லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் மனைவி கேள்வி!

மி டூ இயக்கத்தில் நுழைந்துள்ள கருப்பு ஆடு லீனா மணிமேகலை என்று இயக்குனர் சுசிகணேசனின் மனைவி மஞ்சரி வறுத்தெடுத்துள்ளார். 2005ஆம் ஆண்டு இயக்குனர் சுசிகணேசன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மி டூ இயக்கம் வாயிலாக பெண் கவிஞர் லீனா மணிமேகலை குற்றம்சாட்டினார்.

Susi Ganesan wife... Leena Manimekalai is clearly

மி டூ இயக்கத்தில் நுழைந்துள்ள கருப்பு ஆடு லீனா மணிமேகலை என்று இயக்குனர் சுசிகணேசனின் மனைவி மஞ்சரி வறுத்தெடுத்துள்ளார். 2005ஆம் ஆண்டு இயக்குனர் சுசிகணேசன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மி டூ இயக்கம் வாயிலாக பெண் கவிஞர் லீனா மணிமேகலை குற்றம்சாட்டினார். இதை மறுத்த சுசிகணேசன், லீனா மணிமேகலைக்கு எதிராக ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் சுசிகணேசனிம் மனைவியான மஞ்சரி லீனா மணிமேகலையை கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக மஞ்சரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  Susi Ganesan wife... Leena Manimekalai is clearly

பாதிக்கப்பட்டவரின் மனைவியாக, நானும் லீனா மணிமேகலையின் செய்தியாளர்கள் சந்திப்பைக் கண்டேன். அதில் பாடகி சின்மயி செய்தியாளர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார். ஆனால் நடந்தது என்ன? என்ற எளிமையான கேள்விகளைக் கேட்ட போது கூட செய்தியாளர்களை பார்த்து லீனா மணிமேகலை கூச்சலிட்டதைக் காண்கையில் அதிர்ச்சியாக இருந்தது. லீனா மணிமேகலை உண்மையானவர், நேர்மையானவர் என்றால், மி டூ என்ற மோசடியை படம் பிடித்த செய்தியாளர்கள் முன்னிலையில் உண்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை பயன்படுத்தி இருக்க வேண்டும்.  Susi Ganesan wife... Leena Manimekalai is clearly

அதிலும் ஒரு பெண் செய்தியாளரைப் பார்த்து, ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதுபோன்று கேள்வி கேட்க அசிங்கமாக இல்லையா என்றும் அவர் கேட்டுள்ளார். இதில் பாலினம் என்ற விஷயம் எங்கிருந்து வந்தது. பெண் என்ற அடையாளத்தை வைத்து லீனா மணிமேகலை பொய்யை மறைக்கிறார். பாலின சமத்துவத்தை அவர் விரும்புவாரானால், அனைத்துக் கேள்விகளுக்கும் துணிச்சலாக பதில் கூறி இருக்க வேண்டும். 

தற்போது செய்தியாளர்கள் கேட்ட இதே கேள்விகளைத் தான் நானும் கேட்க விரும்புகிறேன். சுசிகணேசன் அத்துமீறியதாகக் கூறப்படும் சம்பவம் நடந்தது எங்கே? என்ன நேரம்? எந்த தெரு?. லீனா மணிமேகலையின் பொய்களை நம்புவோர் இந்த எளிமையான கேள்விகளுக்கு அவரைப் பதில் சொல்ல சொல்லுங்கள். இந்தக் கேள்விகள் ஒன்றும் புரட்சிகரமான கவிஞருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடாது. Susi Ganesan wife... Leena Manimekalai is clearly

நல்லதை விட கெட்டதை மனித மனம் அதிகம் நினைவில் கொண்டிருக்கும். அந்த வகையில், கற்பனையில் உதித்த இந்தச் சம்பவத்தின் எளிமையான விஷயங்கள் கூடவா லீனாவின் நினைவில் இல்லை. மி டூவின் ஏமாற்றுக்காரியான லீனா, அந்த இயக்கத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.

  Susi Ganesan wife... Leena Manimekalai is clearly

மி டூ இயக்கத்தின் கருப்பு ஆடு லீனா மணிமேகலை. இதுமட்டும் அல்லாமல் மேலும் பலரது பெயர்களை தனது மனநிலையைப் பொருத்து வெளியிடுவதாக கூறியுள்ளார். அப்படியானால் அவர்களை எல்லாம் பிளாக் மெயில் செய்கிறாரா? காவல்துறை, நீதிமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்று கூறும் சின்மயி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் போன்றவர்கள், ஊடகங்களுக்கு சாயம் பூசுகிறார். எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். லீனாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சற்று சிந்தியுங்கள். இவ்வாறு மஞ்சரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios