'மீ டூ' இயக்கம் என்ற பெயரில் இப்போது ஒவ்வொரு பிரபலமும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து டிவிட்டரி பகிர்ந்துவரும் விவகாரத்தில், வைரமுத்து சின்மயி விவகாரம் தான் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக். 

அதற்கு போட்டியாக வந்திருப்பது தான் லீனா மணிமேகலை ,சுசி கணேசன் விவகாரம். திருட்டுப்பயலே, விரும்புகிறேன் போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கும் இவர் மீது லீனா மணிமேகலை  புகார் தெரிவித்திருந்தார்.

காரில் என்னை ஏற்றி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார் சுசி கணேசன் என லீனா மணிமேகலை சாட்டிய குற்றத்தை மறுத்து பேசிய சுசி கணேசன். தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க தான் தயார் என்று தெரிவித்ததுடன். லீனா மணிமேகலைஇவ்வாறு தன் மீது குற்றம் சாட்டி இருப்பது தனக்கு அவமானமாக இருக்கிறது இதனால் அவர் மீது வழக்கு தொடுக்க போகிறேன் என்றும் கூறி இருக்கிறார்.

மேலும் தன்னை நிரூபிக்கும் வகையில் லீனா மணிமேகலையை கேவலமாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து லீனா மணிமேகலையும் சுசி கணேசன் தன்னுடைய குற்றத்தை மறைக்க அடுக்கடுக்காக குற்றங்கள் செய்கிறார் என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே , தன் மீது எந்த தவறும் இல்லை , அதனை நீதிமன்றம் வரை கொண்டு சென்று நிரூபிக்க தயார் என தெரிவித்த சுசி கணேசன், அவ்வாறு தான் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் இந்த இடத்திலேயே தூக்கில் தொங்குவேன் என தெரிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது அவரை சார்ந்த வட்டாரத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.