மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை வைத்து முகேஷ் சாப்ரா இயக்கிய கடைசி படமான 'தில் பெச்சாரா' டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஜூலை 24 அன்று வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி, 24 மணிநேரத்தில் 100 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை பிடித்துள்ளது. 

மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான 'தில் பெச்சாரா' படத்தில் நடிகை சஞ்சனா சங்கி அறிமுகமாகியுள்ளார். இந்த படம் ஹாலிவுட் திரைப்படமான ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் நடிகர் சைஃப் அலிகானும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார்.

2.43 நிமிட ட்ரைலரில், சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு மகிழ்ச்சியான கல்லூரி மாணவராக நடித்துள்ளார். புற்றுநோய் நோயாளியான கிஸி பாசு (சஞ்சனா சங்கி) காதலிக்கும் கல்லூரி மாணவர். கொல்கத்தா வீதிகளில் இருந்து பிரெஞ்சு தலைநகர் பாரிஸ் வரை இருவரும் வீடியோவில் ஒரு காதல் பயணத்தில் தங்களைக் காண்கிறார்கள்.

இந்த படத்தில் பெங்காலி நடிகர் ஸ்வஸ்திகா முகர்ஜி, ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார். அவர் கிஸி பாசுவின் தாயாக நடிக்கிறார். கஹானியில் பாப் பிஸ்வாஸாக நடித்த சஸ்வதா சாட்டர்ஜி, படத்தில் பாசுவின் தந்தையாக நடிக்கிறார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர்கள் ட்விட்டரில் #DilBecharaTrailer ஐ சமூக வலைத்தளத்தில் மிகவும் ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி இறந்த சுஷாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தில் பெச்சாரா டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஜூலை 24 ஆம் தேதி வெளியிடும் மற்றும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் சந்தாதாரர்கள் அல்லாதவர்களும் இலவசமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தில் பெச்சாரா இயக்குனர் முகேஷ் சாப்ரா சுஷாந்த் பற்றி கூறுகையில், . “சுஷாந்த் ஒரு இயக்குநராக எனது முதல் படத்தின் ஹீரோ மட்டுமல்ல, அவர் ஒரு அன்பான நண்பராகவும், அணைத்து சூழ்நிலைகளிலும் தனக்கு ஆதரவாக நின்றார். நாங்கள் காய் போ சே முதல் தில் பெச்சாரா வரை நெருக்கமாக இருந்தோம். அவர் எனது முதல் படத்தில் இருப்பார் என்று எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் இல்லாமல் இந்த படத்தை வெளியிடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள, தில் பெச்சாரா படத்தின் டிரைலருகே... மிகப்பெரிய ஆதரவு கொடுத்துள்ள ரசிகர்கள், இந்த படத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.