பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்  ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் இறந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தினமும் அவருடைய தற்கொலை குறித்து புது புது தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பி வருகின்றன. முதலில் மன அழுத்தம் தான் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் எனக்கூறப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அது உறுதியானது. அதையடுத்து பாலிவுட்டின் வாரிசு அரசியலால் தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகளை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கண்டபடி ட்ரோல் செய்து விமர்சித்தனர். 

 

மேலும் படிக்க: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதி...!

தற்போது சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான அனைத்து சம்பவங்களுக்கும் அவருடைய காதலியான ரியா சக்ரபர்த்திக்கு எதிராக திரும்பி வருகிறது. இதையடுத்து சுஷாந்தின் தந்தையான கே.கே.சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஆனால் சுஷாந்த் தற்கொலைக்கு தான் காரணம் இல்லை எனக்கூறி வரும் ரியா,  பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதன் பின்னர் பூதாரகமான பிரச்சனைகளால் ரியா சுஷாந்திற்கு போதை மாத்திரைகளை கொடுத்ததாகவும், அவர் பிரிந்து சென்ற அன்று இரவு அழுது கொண்டிருந்த சுஷாந்த் மறுநாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

 

மேலும் படிக்க:  டாப்லெஸில் தாறுமாறாக போஸ் கொடுத்த ஹன்சிகா... குஷியான ரசிகர்களுக்கு விழுந்த குட்டு...!

இந்நிலையில் சுஷாந்த் வீட்டில் 3 ஆண்டுகளாக வேலை பார்த்த அன்கித் ஆச்சார்யா என்பவர் தெரிவித்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய வீட்டில் நான் வேலை பார்த்த 3 ஆண்டுகளில் எப்போதுமே சுஷாந்த் அண்ணா தனது அறையின் கதவை தாழிட்டது கிடையாது. அறையை உட்புறமாக பூட்டும் பழக்கம் அவருக்கு கிடையாது. நான் கடந்த ஆண்டு என் சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். ஆகஸ்ட் மாதம் திரும்பி வந்தபோது வீட்டில் வேலை பார்த்த அனைவரையும் மாற்றிவிட்டனர். சுஷாந்தின் புது பாதுகாவலர்கள் என்னை வீட்டிற்குள் நுழைய விடவில்லை. ரியா தான் அனைவரையும் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.