இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படமானா ‘எம்.எஸ்.தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி’ நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் இந்தி நடிகர் சுஷாந்த். கடந்த 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எவ்வித பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் சினிமாவில் முன்னணி இடத்திற்கு வந்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க:  பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!

சுஷாந்த் தற்கொலை குறித்து கடிதம் ஏதுவும் கைப்பற்றப்படாததால், போலீசார் திவீர விசாரணையில் இறங்கியுள்ளனர். அவரது குடும்பத்தினர், முன்னாள் காதலி, நெருங்கிய நண்பர்கள், உடன் தங்கியிருந்த பணியாளர்கள் என பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாலிவுட் திரையுலகின் வாரிசு கொள்கை தான் சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. முன்னணி நடிகர், நடிகைகள் தங்களது வாரிசுகளின் நலனுக்காக சுஷாந்தின் பட வாய்ப்புகளை தட்டிப்பறித்ததாகவும், அதனால் மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க:  "என் புருஷனுக்கு வனிதா பத்தோட பதினொன்னு"... பகீர் தகவலை வெளியிட்ட பீட்டர் பாலின் முன்னாள் மனைவி...!

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் “சிச்சோரே”. அமீர் கான் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த “தங்கல்” திரைப்படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி இத்திரைபடத்தை இயக்கிருந்தார். இதில் சுஷாந்த் சிங்குடன், ஷ்ரதா கபூர், வருண் ஷர்மா, நவீன் பொலிஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்கொலைக்கு எதிரான இந்த படத்தில் சுஷாந்த் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதில் இளம் நடிகரான சுஷாந்த் வயதான கதாபாத்திரத்தில் நடித்தது பிடித்து போய் தான் “பிகில்” படத்தில் விஜய் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடித்தாராம். 

 

இதையும் படிங்க: கவர்ச்சியில் யாஷிகா ஆனந்தையே அலேக்காக ஓரங்கட்டிய தங்கை... 18 வயசிலேயே குட்டை உடையில் கொடுத்த கிளாமர் போஸ்கள்!

அட்லி - விஜய் காம்பினேஷனில் மூன்றாவதாக வெளியான திரைப்படம் பிகில். இதில் கால்பந்தாட்ட வீரராகவும், ரவுடி ராயப்பனாகவும் விஜய் இருவேறு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். அப்பா கேரக்டரான ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கேரக்டரில் முதலில் விஜய் நடிக்க தயங்கினாலும், சிச்சோரே படத்தில் சுஷாந்த் நடித்த வயதான கதாபாத்திரத்தை பார்த்து நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த தகவலை பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.